ஆபரேஷன் தியேட்டரில் திருமண போட்டோ ஷூட்- அதிகாரி அதிரடி உத்தரவு

ஆப்ரேஷன் தியேட்டரில் திருமண போட்டோ ஷூட் நடத்திய நிலையில், அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
ஆபரேஷன் தியேட்டரில் திருமண போட்டோ ஷூட்- அதிகாரி அதிரடி உத்தரவு
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்ட சுகாதாரத் துறை மருத்துவர் அபிஷேக் என்பவர், பரமசாகர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். அவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்எடுக்க முடிவு செய்துள்ளார்.

வழக்கமாக பூங்கா, கடற்கரை அல்லது அடர்ந்த காட்டில் பேட்டே ஷூட் நடத்தப்படும் நிலையில், இந்த ஜேடி வித்தியசமாக அரசு மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரிலேயே பேட்டே ஷூட் நடத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

மறுபுறம், அரசு மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரை தவறாக பயன்படுத்தியது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆபரேஷன் தியேட்டரில் போட்டோ ஷூட் நடத்தியது தெடர்பாக விசாரணை நடத்த மாவட்ட சுகாதார அதிகாரி உத்தரவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com