

புதுடெல்லி,
காமன்வெல்த் போட்டிகளில், இன்று ஆடவருக்கான 77 கிலோ எடை பளுதூக்குதல் பிரிவில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது. தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கம் தமிழகத்தைச்சேர்ந்தவர் ஆவார். வேலுர் மாவட்டம் சத்துவாச்சாரியைச்சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார்.
தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்துக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பளுதூக்கும் வீரர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக பெருமைப்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.