5 ஜெட் விமானங்கள் : உண்மை நிலை என்ன? மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி


5 ஜெட் விமானங்கள் : உண்மை நிலை என்ன? மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி
x

மோடி ஜி, 5 ஜெட் விமானங்கள் பின்னணியில் உள்ள உண்மை என்ன? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

கடந்த மே 7-ந் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை மூண்டது. 10-ந் தேதி, பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதால், இந்தியா சண்டை நிறுத்தத்துக்கு சம்மதித்தது. ஆனால், தானே சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.இந்நிலையில், சண்டையின்போது 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

குடியரசு கட்சி செனட் உறுப்பினர்களுக்கு வெள்ளை மாளிகையில் டிரம்ப் விருந்து அளித்தார். அப்போது அவர் பேசுகையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நடந்தது உங்களுக்கு தெரியும். அப்போது, வானில் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 4 அல்லது 5 விமானங்கள் சுடப்பட்டன. உண்மையில், 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கருதுகிறேன்.

நிலைமை மோசமாகிக்கொண்டிருந்தது. இரு நாடுகளும் அணுஆயுத நாடுகள். ஒன்றையொன்று தாக்கிக்கொண்டிருந்தன. வர்த்தகம் மூலமாக அதற்கு தீர்வு கண்டோம். ''நீங்கள் ஆயுதங்களை தூக்கி அலைந்து கொண்டிருந்தால், உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள மாட்டோம்'' என்று கூறினோம்" என்றார்.இந்நிலையில், டிரம்ப் கருத்தை சுட்டிக்காட்டி, மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கேள்விகளை எழுப்பி வருகிறது. அந்த வகையில் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது; "மோடி ஜி, 5 ஜெட் விமானங்கள் பின்னணியில் உள்ள உண்மை என்ன? தேசம் அதை அறிந்து கொள்ளும் உரிமை உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story