மேற்காசிய சூழல்: அரசின் முடிவுக்கு எல்லோரும் ஆதரவு; அனைத்து கட்சி கூட்ட நிறைவில் கிரண் ரிஜிஜு தகவல்

ஒட்டுமொத்த அளவில் எதிர்க்கட்சிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அரசு பதிலளித்து உள்ளது என கிரண் ரிஜிஜு கூறினார்.
மேற்காசிய சூழல்:  அரசின் முடிவுக்கு எல்லோரும் ஆதரவு; அனைத்து கட்சி கூட்ட நிறைவில் கிரண் ரிஜிஜு தகவல்
Published on

புதுடெல்லி

மேற்காசிய மோதல் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெறும் என்றும் அதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் மத்திய அரசு நேற்று அழைப்பு விடுத்திருந்தது. இதன்படி, மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில், காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், அனைத்து கட்சி கூட்டம் நிறைவடைந்த பின்னர் நாடாளுமன்ற விவகாரங்கள் துறைக்கான மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு நிருபர்களிடம் இன்று பேசும்போது, ஒட்டுமொத்த அளவில் எதிர்க்கட்சிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அரசு பதிலளித்து உள்ளது என உங்களிடம் கூறுவதில் திருப்தியடைகிறேன்.

Also Read
டிரம்ப், மேக்ரானை பின்னுக்கு தள்ளி... உலகின் புகழ் பெற்ற தலைவராக பிரதமர் மோடி தேர்வு; அமெரிக்க ஆய்வில் தகவல்
மேற்காசிய சூழல்:  அரசின் முடிவுக்கு எல்லோரும் ஆதரவு; அனைத்து கட்சி கூட்ட நிறைவில் கிரண் ரிஜிஜு தகவல்

இறுதியாக, இந்த நெருக்கடியான தருணத்தில், அரசு என்ன முடிவுகளை எடுக்கிறதோ, நிலைமைக்கு ஏற்ப என்னென்ன நடவடிக்கைகளை எடுக்குமோ, அவற்றிற்கு அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு தருவோம் என்று எதிர்க்கட்சிகளை சேர்ந்த அனைத்து சக உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற தகவல்களை எங்களுக்கு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் என்னென்ன வலியுறுத்தி வந்தனவோ, அவற்றை அரசு இன்று போதிய அளவில் வழங்கியுள்ளது என நான் நம்புகிறேன் என்றார். அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் நாட்டை கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.

போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா., உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளும் வலியுறுத்தி வந்த போதிலும், 3 வாரங்களுக்கும் மேலாக மோதல் தொடர்ந்து வருகிறது. இதனால், மேற்காசிய பகுதியில் பதற்ற நிலை நீடிக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com