மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தலைவர்கள் சென்ற வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல்

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தலைவர்கள் சென்ற வாகனங்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தலைவர்கள் சென்ற வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல்
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தலைவர்கள் சென்ற வாகனங்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் வரும் 2021ம் ஆண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் பகுதிக்கு பாதுகாப்பு வாகனங்களுடன் பா.ஜ.க. மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்க்கியா தனது காரில் சென்றுள்ளார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் சிலர் ஈடுபட்டனர்.

அவரது கார் டையமண்ட் ஹார்பர் பகுதிக்கு வந்தபொழுது, அவரது வாகனத்தின் மீது மர்ம நபர்கள் திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், அவரது காரின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. இதேபோன்று அவர் அமர்ந்திருந்த பகுதியில் உள்ள ஜன்னல் கண்ணாடியும் கல்வீச்சில் சேதமடைந்தது. இதனால், அச்சத்துடனேயே அந்த பகுதியை அவர் கடந்து சென்றுள்ளார்.

அக்கட்சியின் மற்றொரு தலைவரான தீபஞ்சன் குஹா சென்ற வாகனத்தின் மீதும் செங்கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளன. பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பாதுகாப்பு வாகனம் சென்ற பகுதியையும் தடுக்கும் முயற்சியில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com