

கொல்கத்தா,
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 93.19 சதவீத வாக்குகள் பதிவானது. இதையடுத்து எஞ்சிய 142 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் 2ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
இதனிடையே, 2ம் கட்ட தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்துள்ளது. பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில் தொகுதிக்கு தொடர்பு இல்லாத நபர்கள் உடனடியாக தொகுதியில் இருந்து உடனடியாக வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு எந்திரங்களை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.