மேற்கு வங்காள சட்டசபை தேர்தல்; மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது

மேற்கு வங்காளத்தில் தேர்தலை முன்னிட்டு ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.472.89 கோடி மதிப்பிலான பணம், நகை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தல்; மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது
Published on

கொல்கத்தா

மேற்கு வங்காளத்தின் பதவிக்காலம் மே 7-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு, மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி (இன்று) முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியும், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை முடித்து, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டன. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே பலத்த போட்டி காணப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் கடும் வெயிலிலும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, பொதுமக்களை சந்தித்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்காளத்தில் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் கடந்த 21-ந்தேதி மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், மாதிரி வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

அதற்கு முன்பு, வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி நேற்று நடந்தது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் இருந்து மையங்களுக்கு, வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களுடன் இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

மேற்கு வங்காளத்தில் தேர்தலை முன்னிட்டு ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.472.89 கோடி மதிப்பிலான பணம், நகை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. 2,728 பறக்கும் படை குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதுதவிர, கண்காணிப்பு குழுக்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com