மேற்குவங்காள 8வது கட்ட வாக்குப்பதிவு: மதியம் 1 மணி வரை 56.19 சதவீத வாக்குப்பதிவு

மேற்குவங்காளத்தில் 8வது கட்ட தேர்தலில் மதியம் 1 மணி வரை 56.19 சதவீத வாக்குப்பதிவு நடந்து உள்ளது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Image courtesy : indianexpress.com
Image courtesy : indianexpress.com
Published on

கொல்கத்தா,

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுடன் மேற்கு வங்காளமும் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்து வருகிறது. அந்த மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த மார்ச் 27-ந்தேதி நடந்த நிலையில், 8-வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் இன்று (ஏப்.29-ந்தேதி) தொடங்கி நடைபெற்று வருகிறது. மால்டா பாகம் 2, கொல்கத்தா வடக்கு, முர்ஷிதாபாத் பாகம் 2, பிர்பும் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகள் இன்று தேர்தலை சந்திக்கின்றன.

35 பெண்கள் உள்பட 283 வேட்பாளர்கள், இறுதிகட்ட தேர்தல் களத்தில் உள்ளனர். அவர்களின் வெற்றி, தோல்வியை 84 லட்சத்து 77 ஆயிரத்து 728 வாக்காளர்கள் தீர்மானிக்கப்போகின்றனர்.

மொத்தம் உள்ள 11 ஆயிரத்து 860 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6.30 வரை வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தல் நடைபெறும் 35 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வடக்கு கொல்கத்தாவில் உள்ள மகாஜதி சதன் ஆடிட்டோரியம் அருகே இன்று வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த் சம்பவத்தில் பாதிப்பு விவரம் வெளியாகவில்லை. இந்த சம்பவம் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

மேற்கு வங்க கவர்னர் ஜகதீப் தங்கர் மற்றும் அவரது மனைவி சுதேஷ் தங்கர் ஆகியோர் கொல்கத்தாவின் சவுரிங்கீயில் ஒரு வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்.

தேர்தலில் காலை 9:31 மணி நிலவரப்படி 16.04% வாக்குபதிவாகி உள்ளது. , காலை 11 மணி வரை 37.80% வாக்குப்பதிவாகி இருந்தது. மதியம் 1 மணி வரை 56.19 சதவீத வாக்குப்பதி நடந்து உள்ளது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com