

கொல்கத்தா
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தலைவர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளராக செயல்பட்டு வந்த சந்திரா என்பவரை மர்ம நபர்கள் சுட்டு படுகொலை செய்துள்ளனர்.
அவரை மத்தியாகிராம் பகுதியில் வைத்து, மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பவானிபூர் தொகுதியில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிட்டார். அவரை சுவேந்து அதிகாரி வீழ்த்தினார்.
இதில் சுவேந்துக்கு ஆதரவாக தீவிர பணியாற்றியவர் சந்திரா. இதனால், சுவேந்து அதிகாரி வரலாற்று வெற்றியை பெற்றார். இந்த சூழலில், சந்திரா சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.