தேஜஸ்விக்கு ஆண் குழந்தை பிறந்தது; மம்தா நேரில் சென்று வாழ்த்து

தேஜஸ்வி பீகார் மாநில துணை முதல்-மந்திரியாக செயல்பட்டுள்ளார்
தேஜஸ்விக்கு ஆண் குழந்தை பிறந்தது; மம்தா நேரில் சென்று வாழ்த்து
Published on

கொல்கத்தா,

ராஷ்டிரிய ஜனதா தளம் மூத்த தலைவர் தேஜஸ்வி. லாலு பிரசாத் மகனான இவர் பீகார் மாநில துணை முதல்-மந்திரியாக செயல்பட்டுள்ளார். தேஜஸ்வியின் மனைவி ராஜ்ஸ்ரீ. இந்த தம்பதிக்கு காத்யாயினி என்ற பெண் குழந்தை உள்ளது.

இதனிடையே, ராஜ்ஸ்ரீ 2வது முறை கர்ப்பமடைந்த நிலையில் அவர் மேற்குவங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். ராஜ்ஸ்ரீக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், தேஜஸ்வி - ராஜ்ஸ்ரீ தம்பதிக்கு குழந்தை பிறந்த நிலையில் மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று அந்த மருத்துவமனைக்கு வந்தார். குழந்தையை பார்த்தப்பின் தேஜஸ்வி - ராஜ்ஸ்ரீ தம்பதியை சந்தித்து மம்தா வாழ்த்து கூறினார். ராஜ்ஸ்ரீ மற்றும் தேஜஸ்வியை சந்தித்தப்பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, தந்தை மற்றும் தாயை போன்றே ராஜ்ஸ்ரீயின் குழந்தை மிகவும் அழகாக உள்ளது' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com