மேற்கு வங்காள முதல்-மந்திரியின் உதவியாளர் கொலை வழக்கு; முக்கிய குற்றவாளி கைது

அவரை கொல்கத்தா நகரில் உள்ள சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நாளை ஆஜர்படுத்த உள்ளனர்.

மேற்கு வங்காள முதல்-மந்திரியின் உதவியாளர் கொலை வழக்கு; முக்கிய குற்றவாளி கைது
Published on

கொல்கத்தா

மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பவானிபூர் தொகுதியில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிட்டார். அவரை பா.ஜ.க. தலைவரான சுவேந்து அதிகாரி வீழ்த்தி வெற்றி பெற்றார். அதிக இடங்களை கைப்பற்றிய பா.ஜ.க. ஆட்சியமைத்தது.

இதனை தொடர்ந்து சுவேந்து அதிகாரி முதல்-மந்திரியானார். இந்நிலையில், சுவேந்துவின் தனி உதவியாளராக செயல்பட்டு வந்த சந்திரா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். அவரை மத்தியாகிராம் பகுதியில் வைத்து, மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். சுவேந்து வெற்று பெறுவதற்காக தீவிர பணியாற்றியவர் சந்திரா. இதனால், சுவேந்து அதிகாரி வரலாற்று வெற்றியை பெற்றார். இந்த சூழலில், சந்திரா சுட்டு கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் முசாபர்நகர் போலீசாருடன் இணைந்து, சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. இதில், ராஜ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரே துப்பாக்கி சூடு நடத்திய முக்கிய குற்றவாளி என போலீசார் தெரிவித்தனர். அவரை கொல்கத்தா நகரில் உள்ள சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நாளை ஆஜர்படுத்த உள்ளனர்.

இதன்பின்னர், அவரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. எதற்காக அவர், சுவேந்துவின் தனி உதவியாளரை சுட்டு கொன்றார்? யாருடைய தூண்டுதலின் பேரில் இந்த சம்பவம் நடந்தது என்பது விசாரணைக்கு பின்னரே தெரிய வரும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com