மேற்கு வங்காளம்: உணவு விடுதிகள் 3 மணி நேரம் செயல்பட அனுமதி - மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்கு வங்காளத்தில் உணவு விடுதிகள் 3 மணி நேரம் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் வருகிற 15-ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், பல்வேறு வர்த்தக அமைப்பு பிரதிநிதிகளுடன் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று ஆலோசனை நடத்தினார்.

அதில் பேசிய அவர், கொரானா தொற்று குறைந்து வருவதால், தடுப்பூசி போட்டுக் கொண்ட ஊழியர்களுடன் உணவு விடுதிகள் தினமும் 3 மணி நேரம் செயல்படலாம் என தெரிவித்தார். அந்தவகையில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுவதாக கூறினார்.

இதைப்போல ஊரடங்கு நிறைவடைந்தபின் 25 சதவீத ஊழியர்களுடன் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறிய மம்தா பானர்ஜி, மாநிலத்தில் தடுப்பூசி போடுவதற்கு உதவுமாறு வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் கேட்டுக்கொண்டார். ஒட்டுமொத்த மக்களுக்கும் மாநில அரசே ஒரு கை கொண்டு தடுப்பூசி போட முடியாது எனக்கூறிய மம்தா பானர்ஜி, எனவே இந்த பணிகளுக்கு முன்வருமாறு வர்த்தக நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com