மேற்கு வங்காள ஆளுநர் ஆனந்த போஸ் திடீர் ராஜினாமா

முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு எதிராக 2024-லில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார் ஆனந்த போஸ்.
மேற்கு வங்காள ஆளுநர் ஆனந்த போஸ் திடீர் ராஜினாமா
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இன்னும் ஒரு மாதத்தில் மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த சூழலில், மேற்கு வங்காள ஆளுநர் ஆனந்த போஸ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளதாக மேற்கு வங்க ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. போதிய காலம் பதவியில் இருந்துவிட்டேன்.ஆளுநர் அலுவலகத்தில் போதுமான நேரத்தை செலவிட்டுள்ளேன் என ஆனந்த போஸ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு எதிராக 2024-லில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார் ஆனந்த போஸ்.

சட்டசபையில் நிறைவேற்றிய சில மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததால் சர்ச்சைக்குள்ளானவர்.

நாளை மேற்கு வங்காளத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு செல்லும் நிலையில் ஆளுநர் ராஜினாமா செய்துள்ளது மேற்கு வங்காளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்காளத்தில் ஆளுநருக்கும், முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com