மேற்கு வங்காளம்: மேற்கு மிட்னாப்பூரில் கனமழை, வெள்ளம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மேற்கு வங்காளத்தின் மேற்கு மிட்னாப்பூரில் கனமழை, வெள்ளம் தொடர்ச்சியாக மீட்பு பணிகளுக்கான கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.
மேற்கு வங்காளம்: மேற்கு மிட்னாப்பூரில் கனமழை, வெள்ளம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Published on

மேற்கு மிட்னாப்பூர்,

மேற்கு வங்காளத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, கார்பட்டா சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்து அவை மூழ்கியுள்ளன. வெள்ளம் பாய்ந்தோடியதில், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. மரங்கள், மின் கம்பங்கள் நீரால் சூழப்பட்டு உள்ளன.

இதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. மின் விநியோகமும் பாதிக்கப்பட்டு உள்ளது. நிலைமையை மாவட்ட நிர்வாகம் உற்று கவனித்து வருகிறது. நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை ஒருங்கிணைப்பதற்கான கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டு விட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com