கல்குவாரி விபத்து: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 5 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி - மம்தா பானர்ஜி அறிவிப்பு

மிசோரமில் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 5 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கல்குவாரி விபத்து: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 5 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி - மம்தா பானர்ஜி அறிவிப்பு
Published on

கொல்கத்தா,

மிசோரமில் நத்தியால் மாவட்டத்தில் மவ்தார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குவாரியில் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென குவாரியில் கற்கள் அதிக அளவில் சரிந்து விழுந்துள்ளன. இந்த சம்பவத்தில் 12 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்து எல்லை பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று காலை அந்த பகுதிக்கு சென்று மீட்பு பணியை தொடங்கினர். இரண்டு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய அந்த குழு விபத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்களின் உடல்களை நேற்று மீட்டன. எனினும், மீதமுள்ள 4 தொழிலாளர்களை காணவில்லை. தொடர்ந்து அவர்களை தேடும் பணி நடந்தது. இந்த நிலையில், தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மீதமுள்ள ஒருவரை காணவில்லை. அவரை தேடும் பணி நீடிக்கிறது.

இந்தநிலையில் கல்குவாரியில் உயிரிழந்தவர்கள் 5 பேர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கல்குவாரியில் உயிரிழந்தவர்களுக்கு மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மிசோரத்தில் கல் குவாரி இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 5 பேரின் குடும்பங்களுக்கு வேலை மற்றும் நிவாரண உதவி வழங்கப்படும் எனக்கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com