புல்டோசர்களை ஏவ துடிக்கும் அரசியல்வாதிகளின் கைகளில் ​மேற்கு வங்காளம் - மம்தா பானர்ஜி ஆவேசம்

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்துதான் வெற்றி பெற்றது என மம்தா பானர்ஜி கூறினார்.
புல்டோசர்களை ஏவ துடிக்கும் அரசியல்வாதிகளின் கைகளில் ​மேற்கு வங்காளம் - மம்தா பானர்ஜி ஆவேசம்
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 294 தொகுதிகளில் 208 தொகுதிகளில் வென்று, பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், அந்த மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டம் சோனார்பூர் பகுதிக்கு அபிஷேக் பானர்ஜி நேற்று சென்றார்.

அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்

அந்த நேரத்தில், அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் அபிஷேக் பானர்ஜி மீது முட்டைகள், கற்கள், காலணிகள் போன்வற்றை வீசியும் அவரைக் கையால் தாக்கியும் வன்முறையில் ஈடுபட்டதையடுத்து, அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் கல்யாண் பானர்ஜி மீதும் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கினர். இதனைக் கண்டித்து மமதா பானர்ஜி இன்று தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மம்தா பானர்ஜி தர்ணா

ராணி ரஷ்மோனி சாலையில் போராட்டம் நடத்த அனுமதி கோரி திரிணமூல் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளைக் கொல்கத்தா காவல்துறை நிராகரித்தது. ஆகவே, எஸ்பிளனேடில் உள்ள 'ஓய் செனல் பகுதியில் அனுமதி அளிக்கப்பட்டது.

தர்ணா போராட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் தலைவர்கள் மீது பொய் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர். புல்டோசர்களை ஏவ துடிக்கும் அரசியல்வாதிகளின் கைகளில் ​மேற்குவங்காளம் கிடைத்து விட்டது.

"மேற்கு வங்காளத்தை இருளில் தள்ளிய பிரதமர் மோடி. நாடு தழுவிய செயல் திட்டம் குறித்து விவாதிக்க பாஜகவுக்கு எதிரான கட்சிகள் டெல்லியில் கூடி முடிவெடுக்கும். போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். மேற்கு வங்காளத்தில் உள்ள 294 தொகுதிகளில் 177 இடங்களில் பாஜக வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்துதான் வெற்றி பெற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com