மேற்கு வங்காள தேர்தல்: மாலை 4 மணி நிலவரப்படி 69.40% வாக்குகள் பதிவு

மேற்கு வங்காள தேர்தலில் மாலை 4.15 மணி நிலவரப்படி 69.40% வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
மேற்கு வங்காள தேர்தல்: மாலை 4 மணி நிலவரப்படி 69.40% வாக்குகள் பதிவு
Published on

ஜல்பைகுரி,

மேற்கு வங்காள சட்டசபைக்கான தேர்தல் 8 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இன்று 5வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 45 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் 39 பெண்கள் உள்பட 319 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் ஜல்பைகுரி, கலிம்போங், டார்ஜிலிங், நாடியா, வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் புர்பா வர்தமான் ஆகிய 6 மாவட்டங்களில் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

தேர்தலை முன்னிட்டு பணம், மதுபானம், போதை பொருட்கள், இலவச பொருட்கள் என மேற்கு வங்காளத்தில் கடந்த 15ந்தேதி வரை மொத்தம் ரூ.300.11 கோடியளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இன்றைய வாக்கு பதிவில் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து செல்கின்றனர். மதியம் 1.30 மணி நிலவரப்படி 54.67% வாக்கு பதிவு நடந்துள்ளது. மாலை 3.30 மணி நிலவரப்படி 62.40% வாக்கு பதிவு நடந்துள்ளது. மாலை 4.15 மணி நிலவரப்படி 69.40% வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com