மேற்கு வங்களத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 2,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மேற்கு வங்காளத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 2,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
மேற்கு வங்களத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 2,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் கணிசமாகவே உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்காளத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 2,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75,516 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு இன்று புதிதாக 49 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 1,678 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 2,213 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 52,730 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது வரை 21,108 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com