மேற்கு வங்காளத்தில் பேஸ்புக் பதிவால் வன்முறை: ஒருவர் பலியானதையடுத்து மீண்டும் பதட்டம்

மேற்கு வங்காளத்தில் பேஸ்புக் பதிவால் ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் பலியானார். இதையடுத்து அங்கு மீண்டும் பதட்டம் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் பேஸ்புக் பதிவால் வன்முறை: ஒருவர் பலியானதையடுத்து மீண்டும் பதட்டம்
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு புனித தலத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக்கில் பதிவு செய்த தகவல் வைரலாகப் பரவியதையடுத்து, பஷிர்காத் பகுதியில் மதக்கலவரம் ஏற்பட்டது. இரண்டு மதத்தைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி தாக்கிக் கொண்டதால் அப்பகுதி போர்க்களமாக மாறியது. இதையடுத்து அருகில் உள்ள பகுதிகளுக்கும் கலவரம் பரவியது.

கலவரக்காரர்கள் கடைகளை அடித்து நொறுக்கினர். கலவரத்தை அடக்க, எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த 400 வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். கலவரம் நடந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வதந்திகள் பரவாமல் தடுக்க, இன்டர்நெட் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதனிடையே, இன்று 65 வயதுடைய கார்திக் கோஷ் என்பவர் ஒரு கும்பலால் நேற்று கொடூரமாக தாக்கப்பட்டதில் பலியானார். இதையடுத்து அங்கு கலவரம் மீண்டும் வெடித்துள்ளது. கடைகள் சூறையாடப்பட்டன. வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com