

புதுடெல்லி,
ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதன்முறையாக இந்தியா 107 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மேடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
60 ஆண்டுகளில் இல்லாத வகையில் 107 பதக்கங்களை வென்றதில் ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் உள்ளது. நமது வீரர்களின் அசைக்க முடியாத உறுதியும், கடின உழைப்பும் நாட்டை பெருமைப்படுத்தி உள்ளது.
இவ்வாறு பிரதமர் மேடி தெரிவித்துள்ளார்.