ஆதார் கார்டில் பிறந்த தேதியில் திருத்தம் செய்ய என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

ஆதார் கார்டு விவரங்களில் ஏதாவது தவறு இருந்தால் உடனடியாக ஆதார் மையங்களிலோ, ஆதார் செயலி வாயிலாகவோ திருத்திக்கொள்வது நல்லது.
ஆதார் கார்டில் பிறந்த தேதியில் திருத்தம் செய்ய என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?
Published on

ஆதார் கார்டு முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. வங்கி கணக்கு தொடங்குவது முதல் பள்ளிகளில் அட்மிஷன் வரை அனைத்திற்கும் தற்போது ஆதார் கார்டே கேட்கப்படுகிறது. இதனால், ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் துல்லியமாக இருப்பது அவசியம். இதில் ஏதேனும் சில தவறுகள் இருந்தால் பல சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் ஆதார் கார்டு விவரங்களில் ஏதாவது தவறு இருந்தால் உடனடியாக ஆதார் மையங்களிலோ, ஆதார் செயலி வாயிலாகவோ திருத்திக்கொள்வது நல்லது. ஆதார் கார்டில் பிறந்த தேதி தவறாக இருந்தால் அதற்கு என்னென்ன ஆவணங்களை பயன்படுத்தி திருத்தம் செய்ய முடியும் என்பது பற்றி UIDAI தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில்,

• பிறப்புச் சான்றிதழ்

• இந்திய பாஸ்போர்ட்

• சேவை புகைப்பட அடையாள அட்டை

• ஓய்வூதியர் புகைப்பட அடையாள அட்டை

• அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் வழங்கிய மதிப்பெண் பட்டியல் / சான்றிதழ்

இவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து திருத்தம் செய்து கொள்ளலாம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com