கரூரில் நிகழ்ந்தது துரதிர்ஷ்டவசமானது: சுப்ரீம் கோர்ட்டு வேதனை


கரூரில் நிகழ்ந்தது துரதிர்ஷ்டவசமானது: சுப்ரீம் கோர்ட்டு வேதனை
x

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. விஜய் கூட்டத்திற்கு தாமதமாக வந்ததே நெரிசலுக்கு காரணம் என்று போலீஸ் தரப்பிலும், போலீஸ் சரியான ஒத்துழைப்பு வழங்காததே நெரிசலுக்கு காரணம் என்று விஜய் தரப்பிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த வழக்கில் சிபிஐ விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர். தவெக தலைவரும் நடிகருமான விஜய்யிடம் கடந்த 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். சட்டசபை தேர்தலுக்கு முன்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, நாடு முழுவதும் அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரி பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் கூறுகையில், கரூரில் நடைபெற்ற சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இந்த விவகாரத்தில் தலையிட்டு எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்று தெரிவித்தனர்.

1 More update

Next Story