மத்திய அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது? - நிலக்கரி தட்டுப்பாடு விவகாரத்தில் சத்தீஸ்கார் முதல்-மந்திரி கேள்வி

நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் மத்திய அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது? என்று சத்தீஸ்கார் முதல்-மந்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது? - நிலக்கரி தட்டுப்பாடு விவகாரத்தில் சத்தீஸ்கார் முதல்-மந்திரி கேள்வி
Published on

போபால்,

நாட்டின் மின்சார தேவையில் சுமார் 70 சதவீதத்தை, இந்தியாவில் உள்ள 135 அனல் மின் உற்பத்தி நிலையங்கள்தான் பூர்த்தி செய்து வருகின்றன. அனல் மின் உற்பத்திக்கு நிலக்கரி ஆதாரமாக உள்ளது. இதற்கிடையில், நாட்டில் மின் தேவை அதிகரித்துள்ளதால் மின் உற்பத்தையை அதிகரிக்க நிலக்கரிக்கான தேவை பெருகி வருகிறது.

சீனாவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. நிலக்கரிக்கு உள்நாட்டு உற்பத்தியை நம்பியே இருக்க வேண்டியுள்ளது. இதனால், இந்தியாவில் நிலக்கரி தட்டுபாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் மத்திய அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது? என்று சத்தீஸ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று மத்திய அரசு கூறிவருகிறது. ஆனால், மின் நிலையங்கள் மூடப்படுகின்றன. பொய்யான தகவல்களை ஏன் கூறுகிறீர்கள்... நிலக்கரி இறக்குமதியும் நிறுத்தப்பட்டுள்ளது... இது மின் விநியோகத்தை பாதிக்கும். மத்திய அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது? என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com