கேரளா, மேற்கு வங்காளம் மாநிலங்களை காக்க செய்ய வேண்டியவற்றை பா.ஜ.க. மேற்கொள்ளும்; வி.டி. சர்மா

கேரளா மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களை காக்க என்ன செய்ய வேண்டுமோ அதனை பா.ஜ.க. மேற்கொள்ளும் என மத்திய பிரதேச பா.ஜ.க. தலைவர் கூறியுள்ளார்.
கேரளா, மேற்கு வங்காளம் மாநிலங்களை காக்க செய்ய வேண்டியவற்றை பா.ஜ.க. மேற்கொள்ளும்; வி.டி. சர்மா
Published on

இந்தூர்,

மத்திய பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாநில பா.ஜ.க. தலைவர் வி.டி. சர்மா இந்தூர் நகருக்கு வருகை தந்துள்ளார். அவர் பா.ஜ.க.வில் 75 வயது கடந்த ஒருவருக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு வழங்கப்படாத கொள்கை முடிவு உள்ள சூழலில், கேரளாவில் முதல் மந்திரி வேட்பாளராக ஸ்ரீதரன் தேர்வு செய்யப்பட்டது பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசினார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, மத்திய பிரதேசத்தில் நாங்கள் என்ன செய்தோமோ அதன்படி, கேரளா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றை எங்களுடைய கட்சி செய்யும் என்று கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு பற்றி மத்திய அரசிடம் நாங்கள் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் அதற்கு மத்திய அரசும் மாற்று வழிகளை ஆராய்ந்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

விவசாயிகளின் போராட்டம் பற்றி அவர் கூறும்பொழுது, விவசாயிகளுடன் மத்திய தலைமை தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வேளாண் சட்டங்களோடு பெருமளவிலான மாநில விவசாயிகள் ஒத்து போகின்றனர். தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இதனால் பாதிப்பு ஏற்படாது என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com