

தோகாவில் உள்ள தலீபான் அரசியல் அலுவலக தலைவர் முகமது அப்பாஸ் ஸ்டனிக்சாயுடன் கடந்த 31-ந்தேதி நடந்த இந்த சந்திப்பு தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு ஆப்கானிஸ்தான் மண்ணை எந்த வகையிலும் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்பதை இந்தியாவின் முதன்மையான மற்றும் உடனடி கவலையாக தீபக் மிட்டல் எடுத்துரைத்ததாக கூறினார்.
இதற்கு, இந்த பிரச்சினை நேர்மறையாக அணுகப்படும் என தலீபான் பிரதிநிதி பதிலளித்ததாகவும் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.
தலீபான்களுடன் மேலும் சந்திப்பு நடத்தப்படுமா? என்ற கேள்விக்கு, அது குறித்து எந்த தகவலும் தன்னிடம் இ்ல்லை எனவும் அவர் பதிலளித்தார்.