மனைவியை கொன்று செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்த தொழிலாளி

குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டு செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்த கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொணடார்.
மனைவியை கொன்று செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்த தொழிலாளி
Published on

கொள்ளேகால்:

குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டு செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்த கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொணடார்.

மனைவி கொலை

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் மகாதேஸ்வராபெட்டாவை அடுத்த நாகமலைப்பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் லட்சுமி கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். இருப்பினும் தொடர்ந்து முனிராஜ், மனைவியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மனைவியிடம் முனிராஜ் வாக்குவாதம் செய்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முனிராஜ், கீழே கிடந்த கல்லை எடுத்து மனைவியை தாக்கினார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொழிலாளி தற்கொலை

இந்த காட்சியை செல்போனில் படம் எடுத்த முனிராஜ் அதை வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் வைத்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்ற அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதற்கிடையில் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் உடனே இது குறித்து மாதேஸ்வரன் மலை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் குடும்ப தகராறில் முனிராஜ் மனைவியை கொலை செய்துவிட்டு, பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த மகாதேஸ்வரன் மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com