சிறைக்கு அழைத்து சென்றபோது கைதி தப்பி ஓட்டம்

சிறைக்கு அழைத்து சென்றபோது கைதி தப்பி ஓட்டம் பிடித்தார்.
சிறைக்கு அழைத்து சென்றபோது கைதி தப்பி ஓட்டம்
Published on

பெங்களூரு: கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் பட்கல் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரஹிக் (வயது 22). இவர் உடுப்பி மாவட்டத்தில் உள்ள பீஜாடியில் உள்ள செல்போன் கடையில் திருடினார். இதுகுறித்து அந்த கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் முகமது ரஹிக்கை கைது செய்தனர். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து குந்தாப்புரா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் போலீசார் அவரை ஹரியட்காவில் உள்ள கிளை சிறைக்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில் அவர்கள் போலீஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, முகமது ரஹிக் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓடினார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் அதற்குகள் அவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து குந்தாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்த அவரை தேடிவருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com