புல்லட் ரெயில் திட்டப் பணிகள் எப்போது முடிவடையும்..? - ரெயில்வே பதில்

நிலம் கையகப்படுத்துவதில் எழுந்த சிக்கல்கள் மற்றும் கொரோனா காரணமாக புல்லட் ரெயில் திட்டப் பணிகள் தாமதமாகி இருந்தன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

நாட்டின் முதல் புல்லட் ரெயில் மும்பை-ஆமதாபாத் இடையே இயக்கப்பட உள்ளது. இதற்கான திட்டம் கடந்த 2017-ல் தொடங்கப்பட்டது. 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு இந்த திட்டத்தை நிறைவு செய்து, புல்லட் ரெயிலை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது.

ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் எழுந்த சிக்கல்கள் மற்றும் கொரோனா பெருந்தொற்று காரணமாக புல்லட் ரெயில் திட்டப் பணிகள் தாமதமாகின.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர், புல்லட் ரெயில் திட்டப் பணிகள் எப்போது நிறைவடையும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்திய ரெயில்வேயிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, "அனைத்து பணிக்கான டெண்டர்களும் இன்னும் வழங்கப்படவில்லை என்பதால், நாட்டின் முதல் புல்லட் ரெயில் திட்டப் பணிகள் நிறைவடையும் தேதியை முடிவு செய்ய இயலவில்லை" என இந்திய ரெயில்வே பதிலளித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com