அயோத்தி ராமர் கோவில் திருட்டு வழக்கில் குற்றப்பத்திரிகை எப்போது?

அயோத்தி ராமர் கோவில் திருட்டு வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை முடித்துள்ளது.
அயோத்தி ராமர் கோவில் திருட்டு வழக்கில் குற்றப்பத்திரிகை எப்போது?
Published on

அயோத்தி,

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டு குறித்து விசாரிக்க உத்தரபிரதேச அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது. அக்குழு, விவகாரத்தின் பல்வேறு அம்சங்கள் தொடர்பான விசாரணையையும் முடித்துவிட்டது. இதுகுறித்து அயோத்தி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கவுரவ் குரோவர் கூறியதாவது:-

90 நாட்களில் விசாரணை முடிக்கப்பட வேண்டும். அடுத்த மாத இறுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். சிறப்பு புலனாய்வு குழு தனியாக எந்த விசாரணையும் நடத்தவில்லை. உயர்மட்ட விசாரணை ஆலோசகர் என்ற பொறுப்பில் போலீஸ் விசாரணையை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. நான் உள்ளூர் மட்டத்தில் விசாரணையை தொடர்ந்து கண்காணித்து ஆலோசனை கூறி வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com