காப்பீட்டு திருத்த மசோதா எப்போது தாக்கல் செய்யப்படும்? நிர்மலா சீதாராமன் பதில்

நவம்பர் மாதம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது.
புதுடெல்லி,
காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பு 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்படும் என்று நடப்பாண்டு பட்ஜெட் உரையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்நிலையில், நவம்பர் மாதம் தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை 100 சதவீதமாக உயர்த்த வகை செய்யும் காப்பீட்டு திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுமா என்று நிர்மலா சீதாராமனிடம் ஒரு செய்தி நிறுவனம் சார்பில் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘‘நான் எதிர்பார்க்கிறேன்’’ என்று பதில் அளித்தார்.
Related Tags :
Next Story






