ராமஜென்ம பூமி வழக்கு விசாரணை தொடங்குவது எப்போது? 10-ந் தேதி முடிவு செய்யப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

ராமஜென்ம பூமி வழக்கு விசாரணை தொடங்குவதுகுறித்து 10-ந் தேதி முடிவு செய்யப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.
ராமஜென்ம பூமி வழக்கு விசாரணை தொடங்குவது எப்போது? 10-ந் தேதி முடிவு செய்யப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் ஒன்றாக விசாரிக்கப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டு கடந்த அக்டோபர் 29-ந் தேதி இந்த வழக்கை ஜனவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தது. இந்த வழக்கு அன்று 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டு அங்கு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்படும் உரிய அமர்வு வருகிற 10-ந் தேதி விசாரணைக்கான தேதியை முடிவு செய்யும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com