ராமர் கோவில் கட்டி முடிக்கும்வரை ராமர் சிலையை எங்கு மாற்றுவது? - கட்டுமான குழு தலைவர் இன்று ஆய்வு

ராமர் கோவில் கட்டி முடிக்கும்வரை ராமர் சிலையை எங்கு மாற்றுவது என்பது குறித்து கட்டுமான குழு தலைவர் இன்று ஆய்வு நடத்த உள்ளார்.
ராமர் கோவில் கட்டி முடிக்கும்வரை ராமர் சிலையை எங்கு மாற்றுவது? - கட்டுமான குழு தலைவர் இன்று ஆய்வு
Published on

அயோத்தி,

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, ராமர் கோவில் கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்தது. இந்த அறக்கட்டளையின் கீழ், ராமர் கோவில் கட்டுமான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக பிரதமரின் முன்னாள் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும்வரை, அங்கு ஏற்கனவே வழிபடப்பட்டு வரும் ராமர் சிலையை தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், ராமர் கோவில் கட்டுமான குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா இன்று அயோத்தி செல்கிறார். ராமர் சிலையை வழிபடுகிறார். பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படும் இடத்தை பார்வையிடுகிறார். ராமர் சிலையை எந்த இடத்துக்கு மாற்றுவது என்று முடிவு செய்கிறார். மாற்றும் இடம் பற்றி ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com