நீதிபதி கர்ணன் எங்கே? இருக்குமிடம் தெரியாமல் கொல்கத்தா போலீஸ் திணறல், தமிழகம் திரும்புகிறது

நீதிபதி கர்ணன் இருக்குமிடம் தெரியாமல் ஆந்திரா சென்ற கொல்கத்தா போலீஸ் மீண்டும் தமிழகத்திற்கே திரும்புகிறது.
நீதிபதி கர்ணன் எங்கே? இருக்குமிடம் தெரியாமல் கொல்கத்தா போலீஸ் திணறல், தமிழகம் திரும்புகிறது
Published on

சென்னை,

நீதிமன்ற அவமதிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவிட்டது. மேலும் நீதிபதி கர்ணனை மேற்கு போலீஸ் உடனடியாக கைது செய்யவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இதற்கிடையே நீதிபதி கர்ணன் சென்னை வந்தார். அவரை கைது செய்ய கொல்கத்தா போலீசும் காலை சென்னை வந்தது. மேற்கு வங்காள மாநில டிஜிபி அளித்த பேட்டியில் நீதிபதி கர்ணனுக்கு எதிரான உச்சநீதிமன்ற உத்தரவு கிடைக்கப் பெற்றுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை பரிசீலித்து வருகிறோம், அமல்படுத்துவது குறித்து எந்த தகவலும் தற்போது வெளியிட முடியாது என்று தெரிவித்தார்.

கொல்கத்தா போலீஸ் இவ்விவகாரம் தொடர்பாக சென்னை போலீசிடம் பேசிஉள்ளது. இதற்கிடையே நீதிபதி கர்ணன் கர்நாடக மாநிலம் காளஹஸ்தியில் உள்ளதாகவும், அவர் மாலை சென்னை வரலாம் எனவும் தகவல்கள் வெளியாகியது. ஆந்திர மாநிலம் தடாவில் அவர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. இதனையடுத்து கொல்கத்தா மாநில போலீஸ் ஆந்திரா செல்ல திட்டமிட்டது. ஆந்திர போலீசிடம் உதவியை நாடியது. தமிழக போலீசும் ஆந்திரா விரைந்த கொல்கத்தா போலீசுக்கு உதவியாக சென்றது. காலையில் இருந்தே கர்ணன் எங்கே என தெரியாமல் கொல்கத்தா போலீஸ் திணறி வருகிறது.

ஆந்திராவில் செல்போன் மூலம் நீதிபதி கர்ணன் எங்கு உள்ளார் என்பதை கண்டுபிடிக்கும் கருவின் மூலம் போலீஸ் சோதனையில் ஈடுபட்டது.

ஆந்திராவில் நீதிபதி கர்ணன் இருக்குமிடம் தெரியாமல் கொல்கத்தா மாநில போலீஸ் திணறியது. விசாரணை தொடரும் நிலையில் மீண்டும் போலீஸ் திரும்புகிறது என தகவல்கள் வெளியாகியது. முன்னதாக நீதிபதி கர்ணனின் கார் ஓட்டுநர் மொபைல் எண்ணை வைத்து அவர்களை தேடும் பணியானது தொடங்கியது, அப்போது அவர்கள் தடாவில் இருப்பதாக கூறப்பட்டது. இப்போது போலீஸ் அங்கு சென்றும் எந்தஒரு சாதகமான நகர்வும் காணப்படவில்லை, இதனையடுத்து அவர்கள் திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com