நவ. 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல்: அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார்? - பிரபல இந்திய ஜோதிடர் கணிப்பு

நவ. 3-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக யார் வெற்றிபெறுவார் என்பது குறித்து பிரபல இந்திய ஜோதிடர் கணித்துள்ளார்.
நவ. 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல்: அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார்? - பிரபல இந்திய ஜோதிடர் கணிப்பு
Published on

பீகார்,

நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி, இதுவரை 8 கோடிக்கும் மேற்பட்டோர் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க மக்களின் வாக்குகளை கவர்வதற்காக ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகள் தீவிர இறுதி கட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து உலக அளவில் பெரும் விவாதங்களும், பல கோடி ரூபாய் அளவில் சூதாட்டங்களும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் அதிகபட்சமாக 9 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெறுவார் என்று இந்தியாவின் பிரபல ஜோதிடரான சங்கர் சரண் திரிபாதி கணித்துள்ளார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த சங்கர் சரண் திரிபாதி அமெரிக்க அதிபர் டிரம்பின் ஜாதகத்தை ஆய்வு செய்து அனைத்து கிரகங்களும் டிரம்புக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றாலும் அவர் வாக்குகளில் மோசடி செய்துதான் வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவார் என்றும் ஜோதிடர் திரிபாதி தெரிவித்துள்ளார்.

பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத்தின் ஜோதிட ஆலோசகராக இருந்த சங்கர் சரண் திரிபாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் இருந்தவர் ஆவார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com