பீகார் துணை முதல்-மந்திரியாக போவது யார்? 3 பேர் போட்டி

ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த விஜேந்திர யாதவ், விஜய் சவுத்ரி மற்றும் ஷ்ரவன் குமார் ஆகிய மூன்று மூத்த தலைவர்கள் உள்ளனர்.
பீகார் துணை முதல்-மந்திரியாக போவது யார்? 3 பேர் போட்டி
Published on

பாட்னா

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் மாநிலங்களவை எம்.பி.யாகும் முடிவில் இருக்கிறார். அதற்கான தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதனால், ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராகவும் சமீபத்தில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறினார்.

எனினும், இதற்கு கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவர் பதவி விலக கூடாது என நிர்வாகிகள், தொண்டர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில், எம்.எல்.சி. பதவியை நிதிஷ் குமார் கடந்த மார்ச் 30-ந்தேதி ராஜினாமா செய்தது பரபரப்பாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பீகாரில் புது வருட நாளான இன்று அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டது. பீகார் முதல்-மந்திரி பதவியை நிதிஷ் குமார் இன்று ராஜினாமா செய்துள்ளார். இதனால், 21 ஆண்டுகளாக முதல்-மந்திரியாக பதவி வகித்த அவருடைய சகாப்தம் முடிவுக்கு வந்தது.

அவருடைய ராஜினாமாவை அடுத்து, அவரின் மகனுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பீகாரின் புதிய முதல்-மந்திரியாக பா.ஜ.க.வை சேர்ந்தவரான சாம்ராட் சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். துணை முதல்-மந்திரியான சவுத்ரி முதல்-மந்திரியானதும் அந்த பதவி காலியானது.

இந்த நிலையில், துணை முதல்-மந்திரிக்கான போட்டியில், ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த விஜேந்திர யாதவ், விஜய் சவுத்ரி மற்றும் ஷ்ரவன் குமார் ஆகிய மூன்று மூத்த தலைவர்கள் உள்ளனர். அவர்களில் 2 பேர் புதிய அரசில் பீகார் துணை முதல்-மந்திரிகளாக நியமிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com