அனைத்து ரெயில்களிலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது? - மும்பை ஐகோர்ட்டு கேள்வி


அனைத்து ரெயில்களிலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது? - மும்பை ஐகோர்ட்டு கேள்வி
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 20 Jun 2025 7:51 PM IST (Updated: 20 Jun 2025 7:52 PM IST)
t-max-icont-min-icon

ரெயில் விபத்துகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க ரெயில்வேதுறை எடுத்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்தனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புறநகர் ரெயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக ரெயிலில் தொங்கியபடி சென்ற பயணிகள் ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்தனர். இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 8 பேர் படுகாயங்களோடு உயிர் தப்பினர். இது தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, "ரெயில்கள் அனைத்திலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது?" என ரெயில்வே அதிகாரிகளுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், ரெயில் விபத்துகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க ரெயில்வேதுறை எடுத்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என அதிருப்தி தெரிவித்தனர். நாளொன்றுக்கு10 பேர் ரயில் விபத்துகளில் உயிரிழப்பது, ரெயில்வே துறை கவலைக்கிடமாக உள்ளது என்பதை உணர்த்துவதாக நீதிபதி வருத்தம் தெரிவித்தார்.

தொடர்ந்து, ரெயில்வே துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விபத்து தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நீதிபதியிடம் தெரிவித்தனர். ரெயில் பெட்டிகளில் தானியங்கி கதவுகளை நிறுவ பரிசீலிக்குமாறு ரெயில்வே அதிகாரிகளை அறிவுறுத்தி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

1 More update

Next Story