

பெங்களூரு
கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடடுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பா.ஜனதா தலைவர்கள் ஒவ்வொருவராக முஸ்லிம்கள் தங்களின் இதயத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். ஹிஜாப் வன்முறை, வியாபார புறக்கணிப்பு, மதக்கலவரம் செய்தபோது அந்த மக்கள் மீது இல்லாத நேசம் தற்போது பா.ஜனதா தலைவர்களுக்கு வந்துள்ளது. இதை கேட்டு அடிக்கடி நிறம் மாற்றி கொள்ளும் பச்சோந்தி கூட சிரிக்கும். இது ஒரு சமூக மக்களை கவரும் அரசியலுக்குள் வருவது இல்லையா?.
முன்னாள் மந்திரி ஈசுவரப்பா, முஸ்லிம்கள் நல்லவர்கள் என்றும், பா.ஜனதாவை சேர்ந்த உமாநாத் கோட்யான் எம்.எல்.ஏ., நான் பிற பா.ஜனதாவினரை போல் அல்ல, முஸ்லிம்கள் எனது உறவுகள் என்றும், அக்கட்சியின் உதய் கருடாச்சார் எம்.எல்.ஏ., நான் எப்போதும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக நிற்பேன் என்றும் கூறியுள்ளனர். பா.ஜனதா தலைவர்களுக்கு திடீரென முஸ்லிம் மக்கள் மீது அன்பு வருவது ஏன்?.
இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.