யுபிஐ வழியாக பேங்க் பேலன்ஸ் செக் செய்ய கட்டுப்பாடு ஏன்? என்.பி.சி.ஐ தகவல்

AI Image for representation
வாடிக்கையாளர்கள் தங்கள் யு.பி.ஐ. ஐடியில் இருந்து வங்கி கணக்கில் உள்ள இருப்பை ஒரு நாளைக்கு 50 முறை சரிபார்க்க முடியும்.
செல்போன்கள் மூலமாக செய்யப்படும் யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனைகளுக்கான புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
தற்போது நாடு முழுவதும் சிறிய பெட்டிக்கடை முதல் வணிக வளாகங்கள் வரையில் பிரதானமாக யுபிஐ மூலமே பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. யுபிஐ மூலமான பணப் பரிவர்த்தனை இனி வேகமாக இருக்கும் என தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் தெரிவித்துள்ளது.
அதாவது, என்.பி.சி.ஐ. நிறுவனத்தின் சுற்றறிக்கையின்படி, பொதுவாகப் பயன்படுத்தப்படும் யு.பி.ஐ. பரிவர்த்தனை நிலையைச் சரிபார்த்தல் மற்றும் பரிவர்த்தனை ரத்து போன்றவற்றுக்கான ரெஸ்பான்ஸ் டைம் எனப்படும் பதிலளிப்பு நேரம் 30 வினாடிகளில் இருந்து 10 வினாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. அக்கவுண்ட் ஐடிக்களை சரிபார்க்கும் பதிலளிப்பு நேரம் 15 வினாடிகளில் இருந்து 10 வினாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வாடிக்கையாளர்கள் தங்கள் யு.பி.ஐ. ஐடியில் இருந்து வங்கி கணக்கில் உள்ள இருப்பை ஒரு நாளைக்கு 50 முறை சரிபார்க்க முடியும் என்ற கட்டுப்பாடும் கொண்டு வரப்படுகிறது. நெட்வொர்க்கில் தேவையற்ற சுமையை ஏற்படுத்துவதை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.