பேரரசர் அக்பரை சிறப்பானவர் என்றால் ஏன் ராணா பிரதாப் சிங்கை அவ்வாறு அழைக்கவில்லை? - ராஜ்நாத் சிங்

வரலாற்றில் மேவாரை ஆண்ட மஹாராஜா ராணா பிரதாப் சிங் அக்பர் காலத்தில் வாழ்ந்த பெரும் வீரம் பெற்ற அரசராவார். அவருக்கு உரிய இடத்தை வரலாற்றாசிரியர்கள் அளிக்கவில்லை. எனவே ராஜபுத்திர அரசருக்கு உரிய இடத்தை வரலாற்றிசிரியர்கள் மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.
பேரரசர் அக்பரை சிறப்பானவர் என்றால் ஏன் ராணா பிரதாப் சிங்கை அவ்வாறு அழைக்கவில்லை? - ராஜ்நாத் சிங்
Published on

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தில் ராணாவின் சிலையை திறந்து வைத்து பேசுகையில் அக்பரை சிறப்பானவர் என்ற வரலாற்றாசிரியர்கள் ராணாவை அவ்வாறு அழைப்பதில்லை என்பது எனக்கு வியப்பளிக்கிறது. அவர் ஒரு உண்மையான ராஜதந்திரியாவார். அவர் அரியணையை தியாகம் செய்தும், கேளிக்கைகளைத் துறந்தும் சுயமரியாதைக்காக போரிட்டார். வீரத்திற்கு தனித்ததொரு சிறப்பான அந்தஸ்தைக் கொடுத்தார். எனக்கு அக்பரை சிறப்பானவர் என்று அழைப்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் வரலாற்றில் ராணா பிரதாப் சிங்கிற்கு பொருத்தமானதொரு மதிப்பீடு வழங்க வரலாற்றிசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார் ராஜ்நாத் சிங்.

முதல் விடுதலைப் போரில் (1857) பங்கெடுத்தவர்களுக்கு ராணா ஒரு முன்மாதிரியாக விளங்கினார். ராணாவிற்கு சிறப்பானதொரு அந்தஸ்தை வழங்காதது பெரிய தவறாகும். இத்தவறு களையப்பட வேண்டும் என்றார் ராஜ்நாத் சிங்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com