

புதுடெல்லி,
டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க இருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அந்நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துவிட்டார். இப்போது குடியரசு தினவிழாவில் தலைமை விருந்தினர் பங்கேற்பு இல்லை. இந்நிலையில் நாம் ஏன் குடியரசு தினவிழா கொண்டாட்டத்தையே ரத்து செய்யக்கூடாது? எப்போதும்போல் அணிவகுப்புகளை உற்சாகப்படுத்த மக்களை கூட்டுவது பொறுப்பற்ற செயலாக இருக்கும் என்று கூறியுள்ளார்.