காசி தமிழ் சங்கமத்துக்கு தமிழக முதல்-அமைச்சரை ஏன் அழைக்கவில்லை? - தி.மு.க. எம்.பி. கேள்வி

காசி தமிழ் சங்கமத்துக்கு தமிழக முதல்-அமைச்சரை ஏன் அழைக்கவில்லை என்று தி.மு.க. எம்.பி. கேள்வி எழுப்பினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

தி.மு.க.வைச்சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், காசி தமிழ் சங்கம நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் தமிழ்நாட்டு அறிஞர்களை அழைக்காததற்கான காரணங்களையும், நிகழ்ச்சிக்கான செலவு விவரங்களையும் மாநிலங்களவையில் கேள்வியாக கேட்டு இருந்தார். இதற்கு மத்திய கல்வித்துறை தரப்பில் இணை மந்திரி சுபாஷ் சர்க்கார் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அந்தப்பதிலில், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் ஆதரவை கேட்டு, கடந்த 27-10-2022 அன்று கல்வித்துறை மந்திரி கடிதம் எழுதியதாகவும், தமிழக மக்கள் காசிக்கு வருவதை ஊக்கப்படுத்த வேண்டும் எனக்கேட்டதாகவும், 15 தமிழ் அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், சங்கம நிகழ்ச்சியை கல்வி, ரெயில்வே, ஜவுளி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட அமைச்சகங்கள், துறைகள், வாரணாசி இந்து பல்கலைக்கழகம் ஆகியவை சேர்ந்து ஏற்பாடு செய்ததாகவும், செலவு விவரங்களை அந்தத்துறைகளே பார்த்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com