‘இந்து பாகிஸ்தான்’ என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் என சசிதரூர் சொல்வது ஏன்?

‘இந்து பாகிஸ்தான்’ என்ற தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறியுள்ளார். #ShashiTharoor
‘இந்து பாகிஸ்தான்’ என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் என சசிதரூர் சொல்வது ஏன்?
Published on

புதுடெல்லி,

2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா இப்போது உள்ள பலத்துடன் வெற்றியை பெற்றால், நம்முடைய ஜனநாயகம் பெரும் அழிவை எதிர்கொள்ளும். இந்தியா இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசியது சர்ச்சையாகியுள்ளது. சசிதரூர் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜனதா, காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே சசிதரூர் தன்னுடைய கருத்தில் ஸ்திரமாக உள்ளார். இந்து பாகிஸ்தான் என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் என கூறும் சசிதரூர் இதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

பா.ஜனதாவின் பார்வைக்கு நான் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற அவசியத்தை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஏற்கனவே பேசியதைதான் மறுபடியும் கூறியுள்ளேன். அவர்களுக்கு இந்து ராஷ்டிராவை உருவாக்க வேண்டும் என்ற ஐடியா இனி கிடையாது என்றால் அதனை ஒப்புக்கொள்ளட்டும். இப்போது அவர்கள் கூறியதனை நான் நினைவுப்படுத்தியதற்கு நான் எப்படி மன்னிப்பு கேட்க முடியும்? என்று பதில் கேள்வியை எழுப்பியுள்ளார் சசிதரூர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com