தினமும் ஆபாச ரீல்ஸ் எடுத்த மனைவி; ஆவேசம் அடைந்த கணவர்... அடுத்து நடந்த கொடூரம்

வீடியோ சான்றுகளின் அடிப்படையில், வழக்கு முழு அளவில் விசாரிக்கப்படுகிறது என உதவி கமிஷனர் சித்தார்த் கவுதம் கூறியுள்ளார்.
காசியாபாத்,
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்தவர் அனீஸ். இவருடைய மனைவி இஷ்ரத். இன்ஸ்டாகிராமில் பரபரப்புடன் இயங்கி வரும் இஷ்ரத், பல சமயங்களில் ஆபாச படங்களாக எடுத்து, அவற்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு வந்து உள்ளார். இது அனீசுக்கு எரிச்சல் ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து பேசினால், அவரை அச்சுறுத்தும் வகையில் இஷ்ரத் நடந்து கொண்டிருக்கிறார். மனைவியின் செயல்கள் பற்றி அனீஸ் கூறும்போது, பொய்யான வழக்குகளை போட்டு விடுவேன் என தன்னை அச்சுறுத்தி வந்ததுடன், ஒரு முறை கத்தியால் தாக்கியும் உள்ளார் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.
இதுபற்றிய வீடியோ ஒன்றை போலீசிடம் காட்டியுள்ளார். இதற்காக நீண்டகாலத்திற்கு மனைவியுடன் அவர் போராடி வந்திருக்கிறார். அவருக்கு வேறு ஆண்களுடன் தொடர்பு உள்ளது என குற்றம் சாட்டும் அனீஸ், பெரும்பாலான நேரம் மொபைல் போனிலும், சமூக ஊடகத்திலும் நேரம் செலவிடுவார். இதனால், வீட்டுக்கு தேவையான வேலைகளை கூட செய்யாமல் புறந்தள்ளியுள்ளார் என வேதனையுடன் கூறினார்.
இதுபற்றி கேட்டால், அவருக்கு கோபம் வந்து விடுகிறது. தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுவதுடன், தன்னையும் குடும்பத்தினரையும் பொய்யான வழக்குகளில் இழுத்து விட்டு விடுவேன் என மிரட்டியும் வந்திருக்கிறார் என அனீஸ் கூறுகிறார்.
இதுபற்றி லோனி காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவாகி உள்ளது. வீடியோ சான்றுகளின் அடிப்படையில், வழக்கு முழு அளவில் விசாரிக்கப்படுகிறது என உதவி கமிஷனர் சித்தார்த் கவுதம் கூறியுள்ளார்.






