

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டம் படியா புரா கிராமத்தை சேர்ந்தவர் ரன்வீர் சிங் (வயது 45). இவருக்கு திருமணமாகி பூஜா (வயது 40) என்ற மனைவி உள்ளார்.
இதனிடையே, பூஜாவுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த 20 வயது இளைஞரான அர்பித் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. மனைவியின் கள்ளக்காதல் குறித்து அறிந்த ரன்வீர் சிங் இதுகுறித்து பூஜாவை கண்டித்துள்ளார்.
இந்நிலையில், ரன்வீர் சிங் நேற்று இரவு வீட்டிற்கு வந்தபோது அவருக்கு பூஜா மது ஊற்றிக்கொடுத்துள்ளார். அதிக அளவில் மது குடித்த ரன்வீர் போதையில் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, கள்ளக்காதலன் அர்பித் உடன் சேர்ந்து கணவன் ரன்வீர் சிங்கை பூஜா கோடாரியால் வெட்டிக்கொலை செய்துள்ளார். பின்னர், அர்பித்தும், பூஜாவும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
ரன்வீரின் வீடு காலை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவரின் உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு ரன்வீர் சிங் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், பூஜாவும் அவரின் கள்ளக்காதலன் அர்பித்தும் ஊரை விட்டு ஓடிச்சென்றதையும் அறிந்தனர்.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் , ரன்வீர் சிங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கணவனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய பூஜாவையும் அவரின் கள்ளக்காதலன் அர்பித்தையும் எட்டாவா மாவட்டத்தில் உள்ள அஹ்னியா ஆற்றுப்பாலம் அருகே வைத்து போலீசார் கைது செய்தனர்.