மனைவியின் கள்ளக்காதலன் கல்லால் அடித்து கொலை - கணவர் வெறிச்செயல்

மனைவியின் கள்ளக்காதலனை கல்லால் அடித்து கொலைசெய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
மனைவியின் கள்ளக்காதலன் கல்லால் அடித்து கொலை - கணவர் வெறிச்செயல்
Published on

ஸ்ரீகாளஹஸ்தி,

ஆந்திரா மாநிலம் புலிச்செர்ல மண்டலம், எல்லம்கிவாரிபள்ளி பஞ்சாயத்து கோபாலபுரம் எஸ்.டி.காலனியை சேர்ந்தவர்கள் சந்திரய்யா- ராணி தம்பதியினர். கணவருடன் ஏற்பட்ட தகராறில் ராணி திருமலைக்கு சென்று அங்குள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தார். அப்போது அதே ஓட்டலில் பணிபுரியும் கர்னூல் மாவட்டம் இந்திரம்மா காலனியை சேர்ந்த ஜெயானந்தபால் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது.

இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த சந்திரய்யா, அவர்களின் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டார். அதற்காக ஜெயானந்தபாலை கொலைசெய்ய திட்டமிட்டு அவரை சித்தூர் மாவட்டம், கல்லூருக்கு அழைத்து வந்தார். அங்கு இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது போதையில் இருந்த ஜெயானந்தபாலை, சந்திரய்யா பாறாங்கல்லால் தலையில் அடித்து கொலை செய்தார். இரண்டு நாட்களுக்கு பிறகு, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே தான் கொலை செய்தது குறித்து கல்லூர் கிராம வருவாய் அதிகாரி ராஜசேகர நாயக்கிடம் சந்திரய்யா தகவல் தெரிவித்துளளார். உடனடியாக அவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தார். அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com