மலைப்பாதையில் 'செல்பி' எடுத்தவர்களை விரட்டிய காட்டுயானை


மலைப்பாதையில் செல்பி எடுத்தவர்களை விரட்டிய காட்டுயானை
x

சாலையோரம் இருந்த மரத்தில் இலைகளை தும்பிக்கையால் பறித்து யானை தின்று கொண்டிருந்தது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா சார்மடி மலைப்பாதையில் அடிக்கடி காட்டுயானைகள் உலா வருவது வழக்கம். சில நேரங்களில் அவைகள், அந்த வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து தாக்குதலும் நடத்துவது உண்டு.

இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து ஒரு காட்டுயானை வெளியேறியது. அந்த காட்டுயானை, சார்மடி மலைப்பாதையின் 4-வது கொண்டை ஊசி வளைவு பகுதிக்கு வந்தது. பின்னர் அந்த காட்டுயானை சாலையில் உலா வந்தது. பின்னர் அங்கு சாலையோரம் இருந்த மரத்தில் இலைகளை தும்பிக்கையால் பறித்து தின்று கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக கார்களில் வந்த பலர் சற்று தூரத்தில் கார்களை நிறுத்திவிட்டு, தங்களது செல்போன்களில் அந்த காட்டுயானையை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர். திடீரென அந்த காட்டுயானை அவர்களை துரத்த தொடங்கியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு தங்களது கார்களில் ஏறி தஞ்சம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

1 More update

Next Story