ஊழல் எம்.பி.க்கள் மீது வழக்கு தொடர சி.பி.ஐ.க்கு அனுமதி கிடைக்குமா? - 4 மாதத்துக்கு மேல் காத்திருக்கிறது

ஊழல் எம்.பி.க்கள் மீது வழக்கு தொடருவதற்காக சி.பி.ஐ. 4 மாதத்துக்கு மேல் காத்திருக்கிறது.
ஊழல் எம்.பி.க்கள் மீது வழக்கு தொடர சி.பி.ஐ.க்கு அனுமதி கிடைக்குமா? - 4 மாதத்துக்கு மேல் காத்திருக்கிறது
Published on

புதுடெல்லி,

ஊழல் எம்.பி.க்கள், பணிபுரியும் மற்றும் ஓய்வுபெற்ற அரசு, வங்கி அதிகாரிகள் 130 பேர் சம்பந்தப்பட்ட 58 ஊழல் புகார்களில் வழக்கு தொடர அவரவரின் துறைகளிடம் அனுமதி கேட்டு சி.பி.ஐ. மாதக்கணக்கில் காத்திருக்கிறது. ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் வெளியிட்ட தகவலில் இது தெரிய வந்துள்ளது.

பொதுவாக, 4 மாதங்களுக்குள் அனுமதி தரப்பட வேண்டும். ஆனால், சி.பி.ஐ. 4 மாதங்களுக்கு மேல் காத்திருக்கிறது.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சவுகதா ராய், ககோலி கோஷ் தஸ்டிதர், பிரசுன் பானர்ஜி, அக்கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி.யும், தற்போதைய மேற்கு வங்காள மந்திரியுமான சுவேனு அதிகாரி ஆகியோர் மீது வழக்கு தொடர மக்களவை செயலகத்திடம் அனுமதி கேட்டு காத்திருக்கிறது.

மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்திடம் 9 புகார்களும், கார்ப்பரேஷன் வங்கியிடம் 8 புகார்களும், உத்தரபிரதேச அரசிடம் 6 புகார்களும் அனுமதி கேட்டு காத்திருக்கின்றன. மேலும், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் நசீம் அகமது மீது வழக்கு தொடரவும் அனுமதிக்காக சி.பி.ஐ. காத்திருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com