மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு - ராகுல்காந்தி

சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கையை துல்லியமாக அறிய முடியும் என்று ராகுல்காந்தி கூறினார்.
மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு - ராகுல்காந்தி
Published on

மால்டா,

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இதை நடத்துவோம் என கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கூறி வருகிறார். 

மேற்கு வங்காளத்தில் நேற்று பாதயாத்திரையிலும் இதை அவர் உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 'நாங்கள் சமூக நீதியை விரும்புகிறோம். மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம். இதன் மூலம் தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் எண்ணிக்கையை அறிய முடியும்' என கூறினார்.

பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் நாடு முழுவதும் வெறுப்பையும், வன்முறையையும் பரப்புவதாக கூறிய ராகுல் காந்தி, நாடு முழுவதும் அநீதி நிலவுவதால் தனது யாத்திரையின் பெயரில் 'நியாயம்' என்ற வார்த்தை இணைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com