குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க என் கடைசி உயிர் மூச்சு உள்ளவரை போராடுவேன் வசீம் ரிஸ்வி சொல்கிறார்

குர்ஆனின் 26 வசனங்களை நீக்கும் போரில் எனது கடைசி மூச்சு உள்ள வரை போராடுவேன் வசீம் ரிஸ்வி சொல்கிறார்
படம்: ANI
படம்: ANI
Published on

புதுடெல்லி

குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க கோரி உத்தரபிரதேச ஷியா மத்திய வக்புவாரியத்தின் முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு சர்ச்சையை கிளப்பி உள்ளது.

வசீம் ரிஸ்வி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

இந்த வசனங்கள் "பயங்கரவாதம், வன்முறை, ஜிஹாத் ஆகியவற்றை ஊக்குவிக்கின்றன" என்றும் அவை உண்மையான குர்ஆனின் ஒரு பகுதியாக இல்லை, ஆனால் பின்னர் ஒரு காலத்தில் செருகப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனை அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் மவுலானா வாலி ரஹ்மானி ரிஸ்வி விளம்பரத்திற்காக இதனை செய்து உள்ளதாக கூறினார்.

மஜ்லிஸ்-இ-உலமா-இ-ஹிந்தின் பொதுச் செயலாளர் மவுலானா கல்பே ஜவாத், ரிஸ்விக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். லக்னோவின் பரா இமாம்பராவுக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை குர்ஆனைப் பாதுகாப்பதற்காக ஒரு அரங்கையும் ஏற்பாடு செய்தார்.

இதனிடையே, வசீம் ரிஸ்வியின் தலையைகொண்டு வருபவருக்கு ரூ.11 லட்சம் பரிசு தருவதாக கடந்த 13-ம் தேதி அமீருல் ஹசன் ஜாப்ரி என்பவர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ பதிவு சமூகவலைதளங்களில் வைரலானது. அமீருல் ஹசன், உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஆவார். இந்நிலையில், அமீருல் ஹசன் மீது மொராதாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து மொரதாபாத் மாவட்ட ஏஎஸ்பி அமீத் குமார்ஆனந்த் கூறும்போது, இருபிரிவினர் இடையே மோதலை உருவாக்கி பகையை வளர்க்கும் வகையில் வழக்கறிஞர் அமீருல் ஹசனின் வீடியோ உள்ளது. இதற்கான சாட்சியங்கள் கிடைத்தவுடன் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இந்த் நிலையில் ஷியா வக்ஃப் குழுவின் முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி ஒரு வீடியோவில் குர்ஆனின் 26 வசனங்களை அகற்றுவதற்கான போரில் தனது கடைசி மூச்சு வரை போராடுவேன். எனது மனைவி, குழந்தைகள், சகோதரர் மற்றும் உறவினர்களால் நான் வெளியேற்றப்பட்டேன். ஆனால் எனக்கு கவலையில்லை. நான் சரியான பாதையில் தான் இருக்கிறேன், கடைசி மூச்சு வரை இந்த போரில் போராடுவேன். நான் தற்கொலை செய்து கொள்வேன் (sic) ஆனால் விட்டு கொடுக்க மாட்டேன், என்று ரிஸ்வி கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com