மக்களவை தேர்தல்: காங்கிரஸ் - ஆம் ஆத்மி பேச்சுவார்த்தை

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என காங்கிரஸ் எம்.பி., முகுல் வாஸ்னிக் கூறினார்.
மக்களவை தேர்தல்: காங்கிரஸ் - ஆம் ஆத்மி பேச்சுவார்த்தை
Published on

புதுடெல்லி,

மக்களவை தேர்தலையொட்டி தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்க டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இடையே  பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் எம்.பி., முகுல் வாஸ்னிக் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

" மக்களவை தேர்தல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடரும், நாங்கள் மீண்டும் சந்திப்போம், அதன் பிறகுதான் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ஒன்றாக இணைந்து தேர்தலை எதிர்கொள்வோம், பாஜகவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் " என்றார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்.பி,. சந்தீப் பதக் மற்றும் டெல்லி கேபினட் மந்திரிகள் அதிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ், ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட், வாஸ்னிக், டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், மோகன் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com